"சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம்" உற்பத்தித்திறன் மூலம்
வளமான கிராமத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயலமர்வானது இன்றைய தினம்
(2025.11.06) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் பிரதேச
செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
நாட்டின் ஒவ்வொரு பிரதேச
செயலகப் பிரிவையும் உள்ளடக்கிய வகையில் தலா ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து
கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உடல்நலம், வீட்டு முகாமை மற்றும்
சமூக நல்வாழ்வு, கலாச்சார மற்றும் ஆன்மீக அபிவிருத்தி மற்றும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய ஆறு முக்கிய கூறுகள் மூலம் சமூக
உற்பத்தித்திறன் என்ற கருத்துக்கள் மூலம் அந்த கிராமங்களை
உற்பத்தித்திறனுடன் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த திட்டம்
ஆரம்பிக்கப்படுள்ளது.
அந்த வகையில் மண்முனை தென் எருவில்பற்று
பிரதேச செயலக பிரிவிலிருந்து மாங்காடு கிராம சேவகர் பிரிவானது இந்த
திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த
நிகழ்வில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுகாதாரம், கல்வி, விவசாயம் உட்பட
ஏனைய திணைக்களங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த திட்டம்
தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்களினால் வளமான ஒரு கிராமத்தை
உருவாக்குவதற்கான செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி
தெளிவூட்டப்பட்டதுடன், கலந்து கொண்ட திணைக்களங்களின் பிரதிநிதிகளின்
கருத்துக்களும் பெறப்பட்டது.
இந்த நிகழ்வினை பிரதேச செயலக உற்பத்தித்திறன் உத்தியோகத்தர் ஜெயகெளசல்யா மகேஸ்வரன் ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)






