அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

 


அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 
 
இது 70.5% என கணிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும், இந்தோனேசியாவுக்கு அடுத்த இடத்தில் மியன்மார் (70.2%) உள்ளதாகவும் அறியமுடிகிறது. 
 
உலக புள்ளி விபர நிறுவனத்தால் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதேவேளை இந்தியாவில் 42% ஆண்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
மேலும், பங்களாதேஷ் (60.6%), சிலி (49.2%) மற்றும் சீனா (47.7%) ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிக ஆண்கள் புகைப்பழக்கம் கொண்டிருப்பதை அறிக்கை காட்டுகின்றது. 
 
இந்நிலையில் தரவரிசையில் 8 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது. 
 
43.2 சதவீத ஆண்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.