மட்டக்களப்பு - காயான்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் நேற்று சனிக்கிழமையன்று கரைஒதுக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பிரதேச மீனவர்கள் வாகரை பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இதேவேளை மட்டக்களப்பு குற்ற தடயவியல் பொலிசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





