இலங்கையின் ஆசிரியர் சேவை யாப்புக்கு இணங்க, நீதிமன்ற நடவடிக்கைகளும் அதன்
தொடர்பான இறுதித் தீர்ப்பும் நிறைவடைந்த பின்னரே எதிர்கால ஆசிரியர்
நியமனங்கள் செய்யப்படும் என்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
பட்டதாரி
சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம்
ஆகியவற்றுடன் நேற்று (18) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்
இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
நீதிமன்றச் செயல்முறை முடிந்தவுடன், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்புக்குள்
மட்டுமே அனைத்து நியமனங்களும் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் என்பதை பிரதமர்
தெளிவுபடுத்தினார்.
ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான சில வழக்குகள்
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இதன் காரணமாகவே பட்டதாரிகளை
ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.





