மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் உளவளத்துறை ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வும் தொற்றா நோய்களுக்குமான பரிசோதனையும் .






























மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து உளநல ஆலோசனை ஆசிரியர்களுக்கான மாணவர்களின் உடல்,உளநல பிரச்சினைகள், சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் டொக்டர்  சதுர்முகம் கேட்போர்  கூடத்தில்  பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி R. முரளீஸ்வரன் அவர்களின்  தலைமையில் கார்த்திகை 17ம்,18ம் திகதிகளில் நடைபெற்றது. இதில் மாணவர்களின் பிரச்சினைகளை,சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல நிபுணர் Dr.R.கமல்ராஜ் அவர்களும், ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் பரிசோதனைகளும்,அது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளை Dr.M.ருதேசன்,Dr.E.உதயகுமார் அவர்களினால் நடாத்தப்பட்டது. 

தொழுநோய்  தொடர்பாக தோல் நோய்களை எவ்வாறு இனங்காண்பது என்பது பற்றி Dr.K.லுபோஜிதாவினால் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இளவயதினரிற்கான பெற்றோரிடம்,அதற்கான ஆலோசனைகளை எவ்வாறு ஆசிரியர்கள் எடுத்து செல்வது என்பது பற்றி உளநல வைத்தியர் Dr.J.சகாய தர்ஷினி அவர்களால் நடாத்தப்பட்டது.


இந்நிகழ்வினை பிராந்திய சுகாதார பணிமனையின் உளநலப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.டான் சௌந்தரராஜா ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.