சீரற்ற வானிலை மத்தளையில் தரையிறக்கப்பட்ட 3 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

 



​கட்டுநாயக்கப் பகுதியில் நிலவிய குறைந்த பார்வைத் திறன் (Low Visibility) காரணமாக, மும்பை, ரியாத் மற்றும் சீனாவின் குவாங்சூவிலிருந்து வந்த மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று காலை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் (MRIA) பாதுகாப்பாகத் திசைதிருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டன.
​விமான நிலைய அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிலவிய அடர்ந்த அதிகாலைப் பனிமூட்டம் காரணமாக பார்வைத் திறன் மிகவும் குறைந்திருந்ததாகத் தெரிவித்தனர்.
​பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் (Air Traffic Controllers) விமான நிலையத்தின் தரையிறக்கங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்த வேண்டியிருந்தது என்றும் அதிகாரிகள் கூறினர்.