மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான சிவப்புநிற நண்டுகள்!












மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் உயிருடன் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள்  கரை ஒதுங்கி வருகின்றன. 

கடந்த  சில நாட்களாகவே இவ்வாறான சிவப்புநிற நண்டுகள் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சிவப்பு நண்டுகள்  கரையொதுங்குவதற்கான காரணம் தெரியாதென மீனவர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அண்மைக்காலமாக  சிவப்பு நிற நண்டுகள் கரையொதுங்கி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.