மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இலக்கிய விழா- -2025







 மட்டக்களப்பு  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும்  இணைந்து நடத்திய இலக்கிய விழாவானது 2025.10.29 அன்று மாலை  2.30 மணிக்கு       பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திரு. S.பார்த்தீபன், கணக்காளர் திரு.A.மோகனகுமார் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.அருணாசலம் சுதர்சன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். மற்றும் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 
இந் நிகழ்வில் பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் , மாணவர்களுக்கு சான்றிதழ்,விருது, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

தேவ சுகிர்தராஜ்