பலஸ்தீன
மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ
பிரார்த்தனையும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும் சம்மாந்துறை நம்பிக்கையாளர்
சபையின் ஏற்பாட்டில் நேற்று (19) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ
மஸ்ஜித் முன்றலில் இடம் பெற்றது.
பலஸ்தீன
மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில்
யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் .
பலஸ்தீன
மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினரினால் கொடுக்கப்பட்ட
மகஜரை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வாசித்துக்காட்டியதுடன், ஒன்று கூடிய
பொதுமக்கள் அனைவரும் ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் துஆ பிராத்தனையில்
ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
இதேவேளை, குறித்த மகஜரை சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபாவிடம் கையளித்தனர் .
இந்
நிகழ்வில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ்
கே.எம்.கே.ஏ.ரம்சீன் காரியப்பர், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா தலைவர்
அல்ஹாஜ் டாக்டர் ஏ.எம்.எம்.ரஷீத், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை
தலைவர் மௌலவி எம்.எல்.எச். பசீர் மதனி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில்
பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை
உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)