பொலிஸ் நிலையத்தில் வைத்து ஆண் மற்றும் பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய பெண்.

 


முறைப்பாடு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு வந்த பெண் ஒருவரால் ஆசிட் (அமிலம்) வீசப்பட்டதில் இருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கலவானை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார்   தெரிவித்தனர்.

கலவானை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட  முறைப்பாடு ஒன்று தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் அவ்விருவரின் மனைவிகள் வியாழக்கிழமை (18) வந்துள்ளனர்.

பொலிஸில் அவர்களுக்கு இடையில்  ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அதிலொருவர் அசிட் வீசியுள்ளார். இதில் ஒரு பெண்ணும்   மற்றொரு நபரும் காயமடைந்து கலவானை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது இளைய மகனின் மனைவி, தனது தோட்டத்தில் அனுமதியின்றி தேயிலைத் கொழுந்துகளைப் பறிப்பதாக அசிட் தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் கணவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

    அது குறித்து விசாரிக்க பொலிஸ் நிலையத்துக்கு அனைவரும்  அழைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, புகார் அளிக்கப்பட்ட தந்தை பொலிஸ் நிலையத்துக்கு  வந்தபோது, தனது கணவரின் மூத்த மகனின் மனைவி வந்திருப்பதை கண்டு கோபமடைந்து அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   அமிலத் தாக்குதலை நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்