ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் இலக்கியவாதி சந்திரகௌரி சிவபாலன் எழுதிய “குருவிக்கூடு” எனும் நூல் வெளியீட்டு விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சுதாகரி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கென்னடி இ மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதி கே.தியாகராஜா இ கிரான் பிரதேச செயலாளர் க.சித்திரவேல் இ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் கலாநிதி தம்பிராஜா ஈஸ்வரராஜா மற்றும் சமூக இ சமய முக்கியஸ்தர்கள் கலைஞர்கள் என பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இந்தியா இ சென்னை மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கொள்ளுப்பெயர்த்தி டாக்டர் உமாபாரதி மற்றும் இந்தியா இ புதுச்சேரி முனைவர் வே. பூங்குழலி பெருமாள் ஆகியோர் நூலுக்கான நயவுரை வழங்கினர்.
நூலாசிரியரின் சகோதரர் வேலுப்பிள்ளை ரவிநாதன் பிரதம அதிதிக்கு நூலின் முதல் பிரதியைக் கைளித்தார்.
தமிழ் வானவை நிறுவுனரான எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஆரம்பகாலத்தில் ஆசிரியராக மற்றும் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகராகப் பணியாற்றிய இவர் கடந்த சுமார் முப்பது ஆண்டுகாலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வருகிறார்.
இவர் கட்டுரைத் தொகுப்புக்களாக முக்கோண முக்குளிப்புஇ நான் பேசும் இலக்கியம் ஆகியவற்றுடன் என்னையே நான் அறியேன் மற்றும் குருவிக்கூடு ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.
மேலும் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் பனிக்குடம் கவிதைத் தொகுப்பினையும் எழுதியுள்ளார்.
விழாவில் கலந்துகொண்டவர்களிடமிருந்து எவ்வித அன்பளிப்புக்களையும் பெற்றுக்கொள்ளாது இலவசமாக நூல்கள் கையளிக்கப்பட்டன.