காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” மரநடுகை வேலைத்திட்டம்!









கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் உள்ளூராட்சி வாரத்தை ஒட்டி, காத்தான்குடியில் இன்று (16) செவ்வாய்க்கிழமை  மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை பசுமையாக்கும் நோக்கில், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நகர சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி வார நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்வேறு இன மரங்கள் காத்தான்குடி வாவிக்கரையோரப் பகுதியில் நாட்டப்பட்டதுடன், அவற்றை பராமரிக்கும் பொறுப்பினை பிரதேச மக்கள் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் JP பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு பசுமை வளர்ச்சிக்கான தங்களின் பங்களிப்பை வழங்கினர்.

 (ஏ.எல்.எம்.சபீக்)