தேசிய
ரீதியில் நடைபெற்ற புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பைச் சேர்ந்த மாதவராஜா
நிதுர்சன் இரண்டாம் இடத்தை பெற்று 75 ஆயிரம் ரூபாய் பணப் பரிசையும்
சான்றிதழையும் பெற்றுள்ளார்.
Dilmah
Conservation நிறுவனம் நடத்திய “Life in a Changing World” என்ற
தலைப்பிலான தேசிய ரீதியிலான புகைப்படப் போட்டியில், Open Categoryயில்
பாண்டிருப்பைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மாதவராஜா நிதுர்சன் அவர்கள்
இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டிக்காக
சிறந்த 70 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இவரது புகைப்படம்
இரண்டாம் இடத்துக்குத் தேர்வாகி, ரூபாய் 75,000 பணப்பரிசும்
வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு கொழும்பில் உள்ள Genesis by Dilmah: Centre யில் அண்மையில் நடைபெற்றது.
( வி.ரி. சகாதேவராஜா)






