தேசிய ரீதியில் அறிவிப்பாளர் போட்டியில் களுதாவளை யக்சயன் வெள்ளிப்பதக்கம் .











அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழி தினப்போட்டியின் அறிவிப்பாளர் போட்டியில் மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய திரு. பரமேஸ்வரன் யக்சயன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை கெளரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம் அதிபர் திரு க. சத்தியமோகன் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இப் போட்டிகளானது  கொழும்பு  விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.