கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக இலங்கை ரோட்டரி ஹெரிடேஜ் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்ப்பில் சிரமமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன

 


 







 கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தில் அங்கம் வகிக்கும் முகமாக இலங்கை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் நாடு பூராவும் முன்னெடுத்துள்ள சுற்றுச்சூழலை பாதுகாத்தல் செயல் திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு ரோட்டரி ஹெரிடேஜ் கழகத்தினால் சிரமமான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. 

சிறுவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்கவும் நோய்த்தாற்றுக்களில் இருந்து பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பணிகள் மட்டக்களப்பு ரோட்டரி ஹெரிடேஜ் கழகத்தினால் இவ்வாறான சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளை தூய்மையாகவும் பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற இடமாகவும் வைப்பதற்காக மட்டக்களப்பு டென்னிஸ் விளையாட்டு மைதானத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு ரோட்டரி ஹெரிடேஜ் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இச்சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.