கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக 2024,டிசம்பர்,10, தொடக்கம் கடமையாற்றிய ஜே.எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெறவுள்ளார்.
இதற்காக இன்றைய 16/09/2025, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருகோணமலையை சேர்ந்த இவர் முன்னாள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பிரதேச செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் 60, அகவையில் ஓய்வு பெறும் நிலையில் அந்த வெற்றிடத்துக்கு திருகோணமலையை சேர்ந்த ஜே.எஸ். அருள்ராஜ் பதவி ஏற்கிறார்.