ஐஸ் போதைப்பொருளை மட்டக்களப்புக்கு கடத்திவரும் கருப்பு ஆடு யார் ....மக்கள் மத்தியில் கேள்வி ?









ஐஸ் போதை பொருட்களுடன் மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் இருவருமாக ஐவர் காத்தான்குடி பொலிஸாரால்   கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய  ஆயர்.ஏம்.ஐ.ரத்நாயக்கா தெரிவித்தார் 

நேற்றிரவு (19)மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பகுதிகளில்  வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்துடன் சந்தேகத்தின் பேரில் இருவர். கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரத்னாயகாவின்ஸப பணிப்புரை யின் பேரில் குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.நந்தன தலைமையிலான பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2.970 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது 
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தி் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். உத்தரவிட்டுள்ளார் 

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

 

 ரீ. எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு