தேசிய மட்ட கராத்தே போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் முதலிடம்.

 






கல்வி அமைச்சினால் நடாத்தப்படும்  அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டின் கராத்தே சுற்றுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் முதலாம் இடத்தினை சுவீகரித்து இச் சாதனையை படைத்துள்ளது.

இப்போட்டி கடந்த 2025/09/12,13,14 ஆம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தை சேர்ந்த 3 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறி இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை (TK/இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை மற்றும் கண்ணகி புரம் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 இதில் சிறி இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை   மாணவர்கள் பங்குபற்றி - 03 தங்கம் - 02 வெள்ளி - 02 வெண்கலம் அடங்கலாக மொத்தம் - 07 பதக்கங்களை வென்றது.

 மட்டுமல்லாது 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான Champion ஆக Sri Ramakrishna college தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் Champion ஆகவும் தெரிவு செய்யப்பட்டது.

 மேலும் எஸ்.நவக்சன் எனும் மாணவன் இவ்வருடத்திற்கான சிறந்த கராத்தே வீரனாக தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக இவ்வருடமும் தெரிவு செய்யப்பட்டார். 


இம் மாணவர்கள் அனைவரும் ராம் கராத்தே சங்கத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 
 ( வி.ரி. சகாதேவராஜா)