கல்முனை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் நோயாளர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டமைக்காக சான்றிதழ் வழங்கி கௌரவம் .

 



இலங்கையில் நோயாளர் பாதுகாப்பில்( patients safety ) சிறந்து விளங்கும் வைத்தியசாலைகளை கௌரவிக்கும் விழாவில்
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பாராட்டு சான்றிதழ் மீண்டும் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கிடையே இடம்பெற்ற இப் போட்டியில் கல்முனை ஆதார வைத்தியசாலை மட்டுமே வடக்கு கிழக்கில் இவ்விருதுக்குக் தெரிவாகியதென்பது குறிப்பிடத்தக்கது.

உலக நோயாளர் பாதுகாப்பு தினம் 2025 தேசிய நிகழ்வு நேற்று (17) புதன்கிழமை கொழும்பு கோல்பேஸ் விடுதியில் சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மருத்துவர் நெளிந்த ஜயதிஸ்ஸ முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

அங்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம் பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடமும் இதே போட்டியில் இதே பாராட்டு சான்றிதழ் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகள் பராமரிப்பில் சிறந்த தகவல் தொடர்புக்காக ISBAR தகவல் தொடர்பு கருவியின் செயல்படுத்தல் திட்டத்திற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

இது, ஒவ்வொரு புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கும் மற்றும் ஒவ்வொரு சிறாருக்கும் பாதுகாப்பான சிகிச்சையை வழங்கும் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

 

 வி.ரி.சகாதேவராஜா)