திருக்கோவில்
வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு திருக்கோவில் கல்வி வலய வலயக்கல்விப்
பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா
கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று (17) புதன்கிழமை நடைபெற்றது.
கல்வி அமைச்சின் மாணவர் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய சிறப்பாக நடைபெற்றது.
இந்
நிகழ்வில் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள்,
கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலையின் அதிபர்கள்,
ஆரியர்கள்,மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)