மட்டக்களப்பு கிரான்குளம் விவேகானந்த பூங்காவில் சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக
புகைவண்டி மற்றும் படகு சவாரி உள்ளிட்ட புதிய வசதிகளுடன் கூடிய சிறுவர்
விளையாட்டுப் பகுதி திறந்துவைக்கப்பட்டது.
சமூக
நலன்புரி ஒன்றியத்தின் தலைவி திருமதி தயனி கிருஷ்ணாகரனின் தலைமையில்
நடைபெற்ற இத் திறப்பு விழாவில் மண்முனைப் பற்று பிரதேச பிரதேச செயலாளர்
திருமதி தெட்சணகெளரி தினேஷ் மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி
ரோகினி விக்னேஸ்வரன் மற்றும் சென் பிரான்சிஸ் அசிசீ இல்ல அருட்.சகோ.
விதுஷன் முதன்மை அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும்
இந் நிகழ்வில் அதிதிகளாக அரச உத்தியோகத்தர்கள், எமது விவேகானந்த
தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர், அதிபர், பயிற்றுநர்கள், திலகவதியார்
மகளிர் இல்ல முகாமையாளர், நிறுவனத்தின் உத்தியோஸ்தர்கள் மற்றும் நிர்வாக
சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அசிசீ பாலர் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
( வி.ரி. சகாதேவராஜா)





.jpg)








