கூகுளில் உலக மக்கள் அதிகமாக தேடியது என்ன ?

 


பொதுவாக, மனிதனுக்கு கேள்விகள் எழுவது இயல்பானது. அந்த சந்தேகம் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி. அந்த சந்தேகம் தீரும் வரை நாம் இயல்பாக இருக்க முடியாது. 
 
எப்படியாவது அதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழும். இது மனிதர்களிடம் பொதுவானது என்று கூறப்படுகிறது. 
 
அந்த வகையில், முன்பு இருந்த காலத்தில் ஒரு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள மக்கள் புத்தகங்கள், நூலகங்கள் அல்லது அதிகம் படித்தவர்களின் உதவியை நாடுவர். 
 
ஆனால், தற்போது அனைத்திற்குமான விடை நமது கைகளில் உள்ள கையடக்கத் தொலைபேசியில் கிடைக்கிறது. கூகுள் செயலி மூலம் நாம் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்கிறோம். 
 
அதன்படி, எந்த கேள்வியாக இருந்தாலும், கூகுள் நமக்கு பதில் தருகிறது. இதற்கிடையே, ஏஐ வருகையும் நமக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது என்றே கூறலாம். 
 
இதன் மூலம் நமக்கு பல விடயங்கள் எளிதாகிவிட்டன. நீங்கள் கூகுளிடம் ஏதேனும் கேள்வி கேட்டால், அது நமக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும். 
 
ஆனால், உலகெங்கிலும் உள்ள மக்கள் கூகுளில் எதை அதிகம் தேடியுள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா? 
 
“என்ன பார்க்க வேண்டும்?” என்ற கேள்வியை 6,200,000 பேர் தேடியுள்ளனர். “எனது பணத்தைத் திரும்பப் பெறுவது எங்கே?” என்பதை 3,400,000 பேர் தேடியுள்ளனர். “இதன் அர்த்தம் என்ன?” என்பதை 2,900,000 பேர் தேடியுள்ளனர். “எனக்கு எப்போது பணம் கிடைக்கும்?” என்பதை 1,800,000 பேர் தேடியுள்ளனர் 
 
“எனது தொடருந்து எங்கே?” என்பதை 1,500,000 பேர் தேடியுள்ளனர். “கிறிஸ்துமஸ் வர எத்தனை நாட்கள்?” என்பதை 1,400,000 பேர் தேடியுள்ளனர். “இது என்ன நேரம்?” என்பதை 1,400,000 பேர் தேடியுள்ளனர். “2024 தேர்தலில் யார் வென்றார்கள்?” என்ற கேள்வியை 2024 இல் 1,300,000 பேர் தேடியுள்ளனர். 
 
மக்கள் பலர் பொதுவான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை தேடியுள்ளனர் என்றாலும், பலர் விசித்திரமான கேள்விகளை தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.