முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை
ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில்
இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார்.
இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
அதேநேரம், அவர் தனது சொந்த இல்லத்திற்கு திரும்பியதில் பலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.