ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்படைய அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் அப்போதைய ஐஜிபி பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற குழவை நியமிக்குமாறு தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.