தேசிய மட்டத்தில் இடம் பெற உள்ள இளையோருக்கான விளையாட்டுப் போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து வீரர்களை தெரிவு செய்வதற்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வளைய விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது
தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்பு விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்றது வரவேற்பு நடனத்தை தொடர்ந்து இளம் வீரர்களை தெரிவதற்கான குழுக்கள் மட்டப் போட்டிகள் இடம் பெற்றது
இன்றைய இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளையக்கல்வி பணிப்பாளர் திரு தினகரன் ரவி அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்
மட்டக்களப்பு வளையக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட 28 கணிஷ்ட பாடசாலைகளின் மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டனர்
மட்டு வளையக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் விளையாட்டு ஆசிரியர்கள் தரம் 3 தொடக்கம் 5 வரையிலான பாடசாலைகளின் மாணவர்கள் என பலரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்
இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட உள்ளனர்.
வரதன்