காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!












க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி  "மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி நேற்று (19) மாலை 3.00 மணிக்கு காத்தான்குடி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன், கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் எஸ். யூ. சுசந்த, நகரசபை பிரதித் தவிசாளர் எம். ஐ. எம். ஜெஸீம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது உதைப்பந்துப் போட்டி, கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் மைதானத்தில் இடம்பெற்றன. வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நகரசபை செயலாளர் றினோஸா முப்லிஹா, நகரசபை உறுப்பினர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச இளைஞர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
 
(ஏ.எல்.எம். சபீக்)