போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன். தலைமையில் போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் இன்று (19) இடம பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 42 மாற்று திறனாளிகளுக்கு 2.7 மில்லியன் பெறுமதியான சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டன.
MJF அறக்கட்டளையானது நாடளாவிய ரீதியில் சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. ''அதன் ஓர் அங்கமாக தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் இன்று வழங்கப்பட்டது.
MJF நிறுவனமானது டில்மா தேயிலையின் விற்பனையின் மூலம் பெறப்படும் வருமானத்தினைக் கொண்டு வாழ்வாதார உதவித் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், சிறார்களின் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான செயற்திட்டங்கள், இளைஞர் யுவதிகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வாழ்வாதார தரத்தை மேம்படுத்திக்கொள்வதுடன் குடும்பத்தின் பொருளாதார தரத்தை மேம்படுத்தமுடியும் என்றார்.
இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.சந்திரகலா கோணேஸ்வரன், MJF அரக்கட்டளை நிலைய முகாமையாளர் திருமதி மெஹமட் சபிக்கா, MJF அரக்கட்டளை நிலைய வள முகாமையாளர் ஐ.பத்மபிரியன், போரதீவுப்பற்று பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கஜேந்தினி சசிதரன், கிராம சேவை உத்தியேகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.