மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய நபரொருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு (Colombo) உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று (18) பிறப்பித்துள்ளார்.
வயது முதிர்ந்த வான் சாரதி ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “பாடசாலையில் இருந்து வீடு திரும்புவதற்காக காத்திருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரே சாரதியால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வான் ஒன்றுக்குள் வைத்து சிறுமியை குறித்த சாரதி தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பு சட்டதரணிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி அவை நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வழக்கறிஞருடைய கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
இதையடுத்து, 30,000 ரூபாய் அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.