உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை உள்ளிட்ட அதிகமான நாடுகள் ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றன.
அதற்கமைய, இந்த ஆண்டு, அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டக் கோவையை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை பிரதான தேசிய வைபவம் உள்ளிட்ட செயற்பாட்டுத்திட்டம் சிறுவர் தின தேசிய வாரம் - 2025 எனப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, 25 ஆம் திகதி சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாடசாலை அதிபர்களின் வகிபாங்கு தொடர்பாக
தெளிவூட்டப்படவுள்ளது.
26 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற மோட்டார் வாகனங்களை நாடளாவிய ரீதியில் சோதனை செய்தல் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுவை உருவாக்குதல் மற்றும் மீளமைத்தல் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
27 ஆம் திகதி சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபாங்கு பற்றி முன்பள்ளி ஆசிரியர்களைத் தெளிவூட்டுதலும், 28 ஆம் திகதி பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு உட்படுவதைத் தடுத்தல் பற்றி சமூகத்தைத் தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
29 ஆம் திகதி சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமயத் தலைவர்களின் பணிப்பொறுப்புக்கள் பற்றி தெளிவூட்டலும், 30 ஆம் திகதி சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒக்டோபர் உலக சிறுவர் தின தேசிய வைபவம் இடம்பெறவுள்ளது.
அத்துடன், வாரம் முழுவதும் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள பிள்ளைகளை அடையாளங்காணல் மற்றும் வீதியோரச் சிறுவர்களை சோதனை செய்வதற்குரிய சுற்றி வளைப்புக்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை உள்ளிட்ட அதிகமான நாடுகள் ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றன.
அதற்கமைய, இந்த ஆண்டு, அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார
அமைச்சின் நெறிப்படுத்தலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச்
சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டக்
கோவையை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தின தேசிய
நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒக்டோபர்
முதலாம் திகதி வரை பிரதான தேசிய வைபவம் உள்ளிட்ட செயற்பாட்டுத்திட்டம்
சிறுவர் தின தேசிய வாரம் - 2025 எனப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, 25 ஆம் திகதி சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாடசாலை அதிபர்களின் வகிபாங்கு தொடர்பாக
தெளிவூட்டப்படவுள்ளது.
26 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்
செல்கின்ற மோட்டார் வாகனங்களை நாடளாவிய ரீதியில் சோதனை செய்தல் மற்றும்
ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுவை உருவாக்குதல்
மற்றும் மீளமைத்தல் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
27 ஆம் திகதி சிறுவர் உரிமைகளைப்
பாதுகாப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபாங்கு பற்றி முன்பள்ளி
ஆசிரியர்களைத் தெளிவூட்டுதலும், 28 ஆம் திகதி பிள்ளைகள் போதைப்பொருள்
பாவனைக்கு உட்படுவதைத் தடுத்தல் பற்றி சமூகத்தைத் தெளிவுபடுத்தவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
29 ஆம் திகதி சிறுவர் உரிமைகளைப்
பாதுகாப்பதில் சமயத் தலைவர்களின் பணிப்பொறுப்புக்கள் பற்றி தெளிவூட்டலும்,
30 ஆம் திகதி சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களும்
முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒக்டோபர் உலக சிறுவர் தின தேசிய வைபவம் இடம்பெறவுள்ளது.
அத்துடன், வாரம் முழுவதும் பாதுகாப்பற்ற
நிலையிலுள்ள பிள்ளைகளை அடையாளங்காணல் மற்றும் வீதியோரச் சிறுவர்களை சோதனை
செய்வதற்குரிய சுற்றி வளைப்புக்களை நடத்துவதற்கும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.





