பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பில் தலைமைத்துவம் வகிப்பவர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சி வேலைத்திட்டம் - 2025

 

 


 






சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பில் தலைமைத்துவம் வகிப்பவர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சி வேலைத்திட்டமானது மட்டக்களப்பு சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் பழைய மாவட்ட செயலகதத்தில் (17) இடம் பெற்றது.
நாடலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் பயிற்சி செயற்திட்டமானது மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரதேச சமுதாய அமைப்பினை வலுப்படுத்தும் நோக்குடன் இடம் பெற்று வருகின்றது.
இவ் பயிற்சியின் போது சமுதாய அமைப்பின் செயற்பாடுகள், கணக்கு நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அமைப்பின் தலைவர், உப தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் உள்ளக கணக்காய்வு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் வளவாளர்களாக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் அமைப்பின் அறிமுகம், அதிகாரம், பொறுப்புக்கள், மேம்படுத்தல் செயற்பாடுகள், சமுதாய அடிப்படை தொடர்பான தெளிவூட்டலை வழங்கியதுடன் தலைமைத்துவம் மற்றும் உள மனப்பாங்கு விருத்தி தொடர்பாக உதவி கல்வி பணிப்பாளர்
ஏ.ஜெயநாதன் மேற்கொண்டார் மேலும் சமுர்த்தி முகாமையாளர்
கே.பகீரதன் அருணலு கடன் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் கணக்கு தொடா்பான பயிற்சி வேலைத்திட்டத்தினை மேற்கொண்டார்.