பெரண்டினா மைக்ரோ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு-2025.09.19

 

 

 


























பெரண்டினா மைக்ரோ இன்வெஸ்ட்மென்ட்    நிறுவனத்தின் அனுசரணையில்    மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்  நிகழ்வானது இன்றையதினம் 19.09.2025 ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று உதவிப்பிரதேச செயலாளர்  பார்தீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் .
 பெரண்டினா நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரதிலீபன் அவர்களும் ஏனைய கிளைமுகாமையாளர்களும் நிறுவன உத்தியாகத்தவர்களும் பங்கேற்றிருந்தனர் .
நிகழ்வில்  தெரிவுசெய்யப்பட்ட 50   மாணவர்களுக்கு அதிதிகளாலும் , பிராந்திய முகாமையாளர் மற்றும் கிளை முகாமையாளர்களாலும்   4500=ரூபாய் பெறுமதியான காசோலைகள் கல்வி மேம்பாட்டுக்காக    வழங்கி வைக்கப்பட்டது .