2025 ஆம் ஆண்டு முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான முதல் ஆறு மாதங்களில் 1,256 கோர விபத்துகளில் 1,332 பேர் உயிரிழந்தனர்.

 


2025 ஆம் ஆண்டு  முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான முதல் ஆறு மாதங்களில் 1,256 கோர விபத்துகளில் 1,332 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான பேருந்து விபத்தாக, 2005 ஏப்ரல் 27 ஆம் திகதி குருநாகல்- கொழும்பு பிரதான வீதியில் உள்ள யாங்கல்மோதர தொடருந்து கடவையில் நிகழ்ந்த விபத்து கருதப்படுகிறது.

கல்கிரியாகமவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, வலகும்புர மற்றும் பொல்கஹவெல தொடருந்து நிலையங்களுக்கு அருகே தொடருந்து பாதையில் கவனக்குறைவாக நுழைந்தது.

இதன் போது கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிச் பயணித்த கடுகதி தொடருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்துக்குப் பின்னரும் இலங்கையில் பல பேருந்து விபத்துகள் நிகழ்ந்தாலும், அவை யாங்கல்மோதர விபத்தின் தீவிரத்தை எட்டவில்லை.