சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட நிகழ்ச்சி இடம் பெற்றது .

 


சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட நிகழ்ச்சி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 19.08.2025 நேற்று இடம்பெற்றது.

அந்தவகையில் இந் நிகழ்வில் 2025ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் மாநாட்டின்போது நியமிக்கப்பட்ட தேசிய இளைஞர் மாநாட்டின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்தோடு தேசிய இளைஞர் மாநாட்டின் உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இளைஞர் விவகாரங்கள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர,   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.