மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதனிற்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிசில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களினால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திறந்திருந்த கடைகளை மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தமது பணிக்காக வழங்கப்பட்டுள்ள அரச வாகனத்தில் சென்று குறித்த கடைகளை பூட்ட வேண்டும் அல்லாதவிடத்து தங்களது கடைகளின் வியாபார அனுமதியினை இரத்து செய்வதாக கூறியதாக கூறப்பட்ட விடையத்திற்கு எதிராக இன்று NPP கட்சியினால் மட்டக்களப்பு தலைமையக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டாளர்களையும், மாநகர மேயரையும் அழைத்த பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு முறைப்பாட்டை பதிவு செய்ததுடன், இரு தரப்பினரும் பின்னர் சமரசத்திற்கு வந்ததாக பொலிஸ் தரப்பு தகவல் மூலமாக அறிய முடிந்தது.