மன்னாரில் இருந்து தனியொரு யுவதி ஒருவர் துணிச்சலுடன் இன்று (12) அதிகாலை கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

 


மன்னாரில் இருந்து தனியொரு பெண் இன்று (12) அதிகாலை கடல் வழியாக படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.

அவர் தற்போது மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.