மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கோரியுள்ளார்.

 


மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.
 
.
 
இலங்கையில் மாறி மாறி வரும் அரசாங்கங்கள், புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றன.
பிரேமதாச, சந்திரிகா, மஹிந்த, ரணில் என அனைவரும் இந்த வாக்குறுதி வழங்கி இறுதியில் புதிய அரசியலமைப்பை முன்வைக்கவில்லை.
 
இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி இந்த நிலைமையிலிருந்து விலகி, முதலில் இலங்கையின் அரசியலமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
 
இந்த மாகாண சபை முறைமையின் கீழ் கணிசமான அதிகாரப் பகிர்வுகள் உள்ளன.
 
எனவே உரிய சட்ட முறைமைகளை நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் கோரியுள்ளார்.
 
அத்துடன் மாகாணசபையின் கீழ் அனைத்து அதிகாரங்களும் மாற்றமின்றி செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதற்கிடையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கமும் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.