இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக குருக்கள்மடம் பாதுகாப்பு படையினரால் "Clean Environment with the Army - A Clean Coast for the Nation " எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் இன்றைய தினம் (2025.07.29) பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் களுதாவளை கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்றது.
இந்த சுத்தப்படுத்துகை நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் "கிழக்கு கரையோரங்களை தூய்மையாக பேணுதல்" எனும் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ், குருக்கள்மடம் பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரி, களுதாவளை மகா வித்தியாலயதின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், சுற்றாடல் உத்தியோகத்தர் (மத்திய சுற்றாடல் அதிகார சபை) , பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு படையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.