பெரியபுல்லுமலை செந்தாமரை சனசமுக நிலையத்தின் ஊடாக போக்குவரத்து அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெரிய புல்லுமலை பாடசாலைக்கு முன்பாக பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
இப்பகுதி மக்களின் நீண்ட கால குறையாக இருந்து வந்த பஸ் தரிப்பிட தேவையினை செந்தாமரை சன சமூக பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியதன் அடிப்படையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்ததுடன், செந்தாமரை சனசமுக நிலையத்தின் பிரதிநிதிகளும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சனசமுக நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய மருத்துவமனைக்கான குறைபாடுகள் சம்பந்தமாகவும் பாடசாலைக்கான குறைபாடுகள் சம்பந்தமாகவும் வருகை தந்திருந்த பிரதி நிதிகளிடம் எடுத்துக் கூறியதற்கு அமையவாக அதனையும் பார்வையிட்டு, அவற்றிற்கான தீர்வையும் இயன்றளவு பூர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.