பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று காலை 40 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்தின் டயர் வெடித்ததினால், பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது.
சம்பவம் குறித்து அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.