சர்வதேச சுற்றுலா மாநாடு மற்றும் பயண விருதுகள் (ITCTA) 2025 இல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 'தெற்காசியாவுக்கான சிறந்த விமான சேவை நிறுவனம்' என்ற
விருதை வென்றுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்த விருது வழங்கலில்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வட இந்திய முகாமையாளர் தம்மிக குலதுங்க இந்த
விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதனை, தமது விரிவான தெற்காசிய
வலையமைப்பு, இலங்கையின் விருந்தோம்பல் சிறப்பம்சம் மற்றும் பிராந்தியம்
முழுவதும் பயணிகளுடனான வலுவான தொடர்புகளுக்கான அங்கீகாரமாக கருதுவதாக
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விசேடமாக ஸ்ரீலங்கன்
ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியாவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையே
சுமார் 90 வாராந்த விமான சேவைகளை முன்னெடுக்கிறது.
அதன்படி, டெல்லி,
மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய பெருநகரங்களுக்கும்,
திருச்சி, மதுரை, ஹைதராபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் சேவையை
முன்னெடுத்து வருகின்றது.