
மட்டக்களப்பு மைலம்பாவெளி உதவும் கரங்கள் சுவாமி விபுலாநந்தர் பாலர் பாடசாலை சிறார்களினால் மாதிரி சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
உதவும் கரங்கள் பணிப்பாளர் ச.ஜெயராஜா தலைமையில் இடம் பெற்ற மாதிரி சந்தை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக பொது சுகாதார பரிசோதகர் P.மனோகரன், பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
சிறார்களுக்கு பொருட்களின் விலை மற்றும் பணத்தின் பெறுமதியை கற்பிப்பதை நோக்கமாக கொண்டு குறித்த சந்தை நடாத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களின் சந்தையில் பலசரக்கு பொருட்கள், மரக்கறி வகைகள், உணவுப் பொருட்கள் மற்றும் பழவகைகள் என பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.
சந்தையில் பொதுமக்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு தமக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்திருந்ததுடன், சிறார்கள் ஆர்வத்துடன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.