விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 



முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மாணிக்கபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
 
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள், இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, 14 நாட்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 
குறித்த பகுதி போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்த பகுதியாக காணப்படுவதால் விடுதலைப்புலிகள் காலத்தில் குறித்த பகுதியில் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக நம்பி தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.