தென்னிந்திய திரைப்படதுறையை ஆக்கிரமித்திருக்கும் போதைப்பொருள் பாவனை.

 


தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
சர்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தர் என்று கருதப்படும் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின் மற்றும் நடிகர் கிருஸ்ணா அத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் கைதை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதன்படி தாம் முழு நேர தொழிலாக ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார் இந்தநிலையில் தென்னிந்திய திரைத்துறையினர் தம்மை பவுடர் ஜெஸ்வீர் என்றே அழைப்பர். 
 
என்றும் கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நடிகர் - நடிகையரை விட, சினிமா பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே தமது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் விசாரணையாளர்களிம் தெரிவித்துள்ளார். 
 
குறிப்பாக நடிகர் - நடிகையர் பிறந்த நாள் நிகழ்வுகள், படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்காகவும் தாம் போதைப் பொருள் விநியோகம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
தமது நெருங்கிய நண்பரான நடிகர் கிருஸ்ணா அடிக்கடி அவரது நண்பர்களுக்கு விருந்து வழங்குவார் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.