பெண்கள் விவசாயி ஒருத்தரை தனது கணவராக தேர்ந்தெடுக்க விரும்பாதது ஏன் ?

 


விவசாயிகளை மணமகன்களாக இணைப்பதற்கு திருமண விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று  விவசாய  அமைச்சர் கே.டி.லால் காந்தா  தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 

தற்போது செய்தித்தாள்களில் வெளியிடப்படும் திருமண விளம்பரங்களில், பெண்களுக்கு பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற மணமகன்கள் தேவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

எனக்கு 61 வயது. நான் திருமண விளம்பரங்களைப் பின்பற்றுகிறேன். ஒவ்வொரு விளம்பரமும் தகுதியான அல்லது திறமையான தொழிலாளியைத் தான்  தேடுகிறது. 

விவசாயிகளை வருங்கால மணமகன்களாக யாரும் குறிப்பிடுவதில்லை. இலங்கையில் விவசாய சமூகத்தின் நிலை இதுதான். 

விவசாயி ஒருவரை மணமகனாகத் தேடும் திருமண விளம்பரம் வெளியிடப்படும் ஒரு மாகாணத்திற்கு  விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வலுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அமைச்சர் லால் காந்தா  தெரிவித்துள்ளார்.