தேசிய சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையிலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தல் என்ற வகையிலும் பல்வேறு வேலை திட்டங்கள் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் மாறிவரும் காலநிலை மாற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணிகளில் ஒன்றான பிளாஸ்டிக் பாவனையை பாடசாலையில் முற்றாக தடை செய்தல் என்ற நோக்கில் மாணவர்களை அறிவுறுத்தும் விசேட காலை ஆராதனை புதன் கிழமை நடைபெற்றது.
கோரளை மத்தி பிரதேச செயலக விதாதா வளநிலையே பொறுப்பதிகாரியும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வாழைச்சேனை கோறளப்பற்று மத்தி விதாதா வள நிலையத்தின் பொறுப்பதிகாரியும் காலநிலை கண்காணிப்புக்கான ஸ்டோரிகேபே யின் காலநிலை அறிக்கையாளரும் ILO SIYB- வணிக ஆலோசகர் , ToMEJC மாம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர், , BSc, PGD-IT, MSC-IT, PhD-Reading) சாஹுல் ஹமீத் புர்ஹானுதீன் அவர்கள் நிபுணத்துவ ஆலோசகராக கலந்து கொண்டு போதனா அடிப்படையில் சிறப்புரையாற்றினார்.
தேவையற்ற நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி மெதுவாக கொல்லும் பிலாஸ்டிக் பாவணையானது அனைவரையும் சிறியோர் முதல் பெரியோர் வரை ஆக்கிரமித்துள்ளது .
எனவே இதன் தாக்கம் குறித்து ஆரம்ப கல்வி மாணவர்கள் விளங்கிக் கொள்வதோடு இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக பாடசாலையையும் தமது வீட்டு சூழலையும் பாதுகாத்து உதவும் என்ன கருவாக்க விருத்தி இந்த அறிவுரையில் போதிக்கப்பட்டது.
வித்தியாலய முதல்வர் ஷல்மானுல் ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்திற்கு பொறுப்பான உதவி அதிபர் ஜமீலா அமீர் மற்றும் இணைப்பாளர் கே எம் .ஜனூஸ் ஆகியோரின் நெறிப்படுத்துதலில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.