காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம் – தமிழ் மக்களுக்கு நீதியின் ஓர் வெற்றி!

 



காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025 திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 2, 2025 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர், அரசாங்கம் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான புதிய வர்த்தமானியை வெளியிட்டால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC/FR/112/25) இல், மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா, மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.
-யாழ். நிருபர் பிரதீபன்