சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

 


சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை கேரள மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி ஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை கண்டுபிடிக்க முடிவு செய்தார். அதாவது தற்போது மக்கள் பயன்படுத்தி வரும் பேனாக்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளன.

இதனால் மாணவி அமலா, பிளாஸ்டிக் இல்லாத பேனாவை கண்டுபிடிப்பதற்கான ஆய்வை மேற்கொண்டு வந்தார். அதன்படி, பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை அவர் கண்டுபிடித்தார்.

 இந்த பேனாவுக்கு அரசின் தகுதி சான்றிதழ் கிடைத்தது மட்டுமல்லாமல் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையை அரசு வழங்கியுள்ளது. இவர், ரூ.15, ரூ.20 ஆகிய விலைகளில் 2 வகையான பேனாக்களை உருவாக்கியுள்ளார். விரைவில் இந்த பேனாக்கள் விற்பனைக்கு வரவுள்ளது.