தனது கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு தனது உயிரையும் மைத்துக்கொண்ட கணவன் .

 

 
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 
 
மனைவியைக் கொலை செய்த பின்னர் கணவரும் உயிரை மாய்த்துக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்த சம்பவத்திற்கான காரணம் தனிப்பட்ட தகராறு என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 
 
இருப்பினும், சரியான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஜூலை 2 ஆம் திகதி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.