ஈரானின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கு
அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததாக, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட்
லாம்மி (David Lammy) தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் அமெரிக்கா நடத்திய
தாக்குதல்களை மீண்டும் நினைவு கூர்ந்து, விசேட உரையொன்றை முன்வைக்கும் போதே
அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் பிரித்தானியா
ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரேலின் தாக்குதல்
நடவடிக்கைகளில் பிரித்தானியா ஒருபோதும் ஈடுபடாது எனவும்
குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை
வைத்திருக்க முடியாது எனவும், அந்த அச்சுறுத்தலைத் தணிக்க அமெரிக்கா
நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை
அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.