பம்பலப்பிட்டிய ரயில் நிலையம் மற்றும் போரா பள்ளிவாசல் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்த நபர் அதிரடியாக கைது .

 


பம்பலப்பிட்டிய பகுதியில் ‘சின்ன சஹ்ரான்’ என்ற புனைப்பெயருடன் செயற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போரா சமூக ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறும் காலப்பகுதியில், அப்பகுதியைச் சுற்றி மொபைல் தொலைபேசி மூலம் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பம்பலப்பிட்டிய ரயில் நிலையம் மற்றும் போரா பள்ளிவாசல் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் வீடியோ பதிவு செய்த இந்த சந்தேக நபர், ஏதோ ஒரு குற்றச் செயலுக்கு முன்னோட்டமாக செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, போரா பள்ளிவாசல் அருகிலுள்ள ரயில் பாதையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து ஸ்மார்ட் மொபைல் தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி , ஸ்ரீமத் குடாரக்வத்த மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதுடைய இந்த சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.